செய்திகள்

இருதய அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்யவா முடியும்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி!

கல்கி டெஸ்க்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய அறுவை சிகிச்சையை நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்யவா முடியும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி யுள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடை பெற்றது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது" என அவர் கூறினார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சையில் வெளிப்படைத் தன்மையில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச் சாட்டு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்கு தெரியக் கூடும்.

இருதய அறுவை சிகிச்சையை 25 ஆயிரம் பேர் முன்னிலையில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்ய முடியுமா? என கோபமாக கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சையை எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் சூழலில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்று விட்டது. தற்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT