Currency
Currency 
செய்திகள்

பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு: அக்டோபர் 12-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!

கல்கி டெஸ்க்

நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 27) உத்தரவிட்டது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிரான இந்த வழக்கை அக்டோபர் 12-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாக ரத்னா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பண  மதிப்பிழப்புக்கு எதிராக மொத்தம் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

SCROLL FOR NEXT