எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி  
செய்திகள்

வேட்புமனுவில் தவறான தகவல் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!

கல்கி டெஸ்க்

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் , 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் , அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சேலம் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், புகார்தாரர் மிலானி, தனது தொகுதியைச் சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. எனது வேட்புமனுவில் எந்த தவறான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த புகார் விசாரணைக்கு உகந்ததல்ல. ஓராண்டு கால அவகாசத்துக்கு பிறகு இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் சேலம் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த மனு குறித்து மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

காவல்துறையின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூன் 6க்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர் - தெரிந்ததும் தெரியாததும்!

Wearable AC: சோனி நிறுவனத்தின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!

மனப் பந்தை மகிழ்ச்சியை நோக்கி நகர்ந்துங்கள்!

உள்ளூரிலேயே உற்சாகமாக டூர் போவது எப்படி?

ஒடிசாவில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பாரா நவீன் பட்நாயக்?

SCROLL FOR NEXT