நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவசூலிலும் மிரட்டியது.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்ஆண்டனி இயக்கியுள்ளார். பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம்பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் எனஎதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் எனஅறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்தவிஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப்படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு மலேசியா சென்றது. அங்குபடப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்குபலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படமானது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி தொடர்ந்த இந்த வழக்கில் விஜய் ஆண்டனி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாங்காடு மூவீஸ் உரிமையாளர் ராஜ கணபதி தனது தயாரிப்பில் எடுக்கப்பட்ட ஆய்வுக்கூடம் படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தியதாக இந்த வழக்கை தொடுத்துள்ளார்.
தனது அனுமதியி்ன்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 படத்தை எடுத்துள்ளதால் தனக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 12-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.