Pope Francis 
செய்திகள்

கத்தோலிக்க திருச்சபையில் தன் பாலின ஈர்ப்பாளர்கள். போப் ஆண்டவரின் அறிவிப்பு.

கிரி கணபதி

த்தோலிக்க திருச்சபையின் கதவுகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உட்பட அனைவருக்குமே எப்போதும் திறந்திருக்கும் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க நம்பிக்கையாளர் களின் குருவாக 86 வயதாகும் போப் பிரான்சிஸ் திகழ்ந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு, பெருங்குடல் சுருங்கி, நோய்த் தொற்று ஏற்பட்டதால் சுமார் 33 சென்டிமீட்டர் அளவிலான குடல், அறுவை சிகிச்சையில் வெட்டி எடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் வயிற்று வலியால் போப் ஆண்டவர் அவதிப்பட்டு வந்தார். 

இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் அவருக்கு குரலில் பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதால் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு பெற்ற பிறகு வாட்டிகன் நகருக்குத் திரும்பினார். ஆனால் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். 

தற்போது அவருடைய உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்புவதால், பல இடங்களுக்குச் சென்று வருகிறார். அதன்படி நேற்று போர்ச்சுகலில் நடந்த ஒரு திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ரோம் திரும்பியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, " என்னுடைய உடல்நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறது. இருப்பினும் உடல் முழுமையாக சரியாகும்வரை வயிற்றில் பெல்ட் அணிவது கட்டாயமாகும். மூன்று மாதங்கள் வரை பெல்ட் அணிய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் தேவாலயங்கள் குறித்தும் பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை எப்போதுமே தன் பாலின ஈர்ப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் திறந்திருக்கும். ஆனால் இங்கே வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இருப்பதால், இவர்களுக்கான திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதனால் தன்பாலின ஈர்ப்பு கொடிய பாவம் என்பதல்ல. உலகில் அனைவருமே கடவுளை தங்களின் சொந்த வழியில் நேசிக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

தேவாலயங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தையோ அல்லது அத்தகைய ஜோடிகளுக்கான ஆசிர்வாதங்களையோ வழங்குவதில்லை. ஆனால் இத்தகைய தம்பதிகளுக்கான உடல்நலக் காப்பீடு, ஓய்வூதியம், சொத்தில் பங்கு போன்ற விஷயங்கள் தொடர்பான அனைத்து சட்டங்களையும் சமீப காலமாக போப் ஆண்டவர் ஆதரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Goblin Shark: The 'Living Fossil'

சின்னத்திரையில் அறிமுகமாகவிருக்கும் கௌதமி… எந்த சீரியலில் தெரியும்?

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

SCROLL FOR NEXT