செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் !

கல்கி டெஸ்க்

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந்தேதி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூட்டப்பட இருகிறது. இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கவில்லை. ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

காவிரி பிரச்சினையை அடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கடந்த 2018 ஜூன் 1ம் தேதி அமைக்கப்பட்டது.

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு மத்தியில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் புதிதாக கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது. இதனால் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT