செய்திகள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் இனி தமிழில்.... இனியாவது போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தமிழ்நாட்டு மாணவர்கள் முன்வருவார்களா?

ஜெ. ராம்கி

மத்திய அரசின் பல்வேறு பணிகளில் சேர மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பணியாளர் தேர்வாணைய தேர்வில் இதுவரை ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தி வருகிறது. நாடு முழுவதுமள்ள பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான ஊழியர்கள் தேர்வை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இரண்டு அல்லது மூன்று கட்டத் தேர்வுகளாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் நாடு முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலங்களில் பணிகளில் அமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

இதுவரையிலான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. இந்த தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தவேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஏற்கனவே மத்திய ஆயுதப்படை தேர்வு உள்ளிட்ட சில போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி, எம்.டி.எஸ் மற்றும் சி.எச்.எஸ்.எல் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளையும் மாநில மொழிகளில் நடத்த முடிவு செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்துவதற்கு மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

இனி இதை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள்? மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது தொடர்ந்து குறைந்து வரும் சூழலில் இது திருப்பு முனை ஏற்படுத்துமா என்பதை கவனிக்க வேண்டும்.

போட்டித் தேர்வுகளில் ஆங்கிலம், தமிழ் மொழிபெயர்ப்புகள் சரியாக அமையாமல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. பொதுத் தேர்வுகளில் கூட ஆங்கிலம், தமிழ் மொழிபெயர்ப்புகள் வேறானதாக அமைந்து, அதற்காக அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான கேள்விகளை சரியானமுறையில் தமிழில் மொழிபெயர்க்கப்படுமா என்கிற கேள்வி எழுகிறது. கூடவே ஹிந்தியும், ஆங்கிலமும் தெரியாமல் நேரடியாக தமிழில் போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் கூட வட இந்திய மாநிலங்களில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அத்தகைய நிலையில் ஹிந்தியும் ஆங்கிலமும் தேவைப்படும். ஆகவேஇ மாநில

மொழிகளில் தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகிறது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT