செய்திகள்

மல்யுத்த வீரர்களுடன் பேச மத்திய அரசு விருப்பம்: அமைச்சர் தகவல்!

ஜெ.ராகவன்

இந்திய மல்யுத்த வீரர் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீர்ர், வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரும்புவதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் மூலம் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீர்ர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு விரும்புகிறது. அவர்களது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் மல்யுத்தவீர்ர்களின் பிரிதிநிதிகளுடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை இரண்டு மணிநேரம் நடைபெற்று நள்ளிரவில் முடிந்தது. இதில் ஒலிம்பிக் பதக்க வீர்ர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாங்கள் அமித்ஷாவை சந்தித்து பேசியது உண்மைதான். அதன் விவரங்களை வெளியிட இயலாது என்று பின்னர் பஜ்ரங் புனியா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீர்ர்களுடன் பேச்சு நடத்த விரும்புவதாக அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றஞ்சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க்க் கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீர்ர்கள் மற்றும் வீராங்கனைகள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவாகரம் தொடர்பாக கடந்த மாதம் 28 ஆம் தேதி தில்லி போலீஸார் பிரிஜ் பூஷன் மீது இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இது தவிர அவர் மீது மைனர் பெண்கள் சிலரும் புகார் அளித்துள்ளனர். தங்களிடம் பாலியல் சீண்டலில் அவர் ஈடுபட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் கூட்டாளிகள் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள அவரது வீட்டில் பணிபுரியும் சிலரிடமும் தில்லி போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீர்ர்களுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவில்லை என்றும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஜூன் 9 ம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்

பாரதிய கிஸான் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் சங்கத் தலைவருக்கு தெரிவிக்காமல் மல்யுத்த வீர்ர்கள் அமித்ஷாவை சந்தித்ததால் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை.

போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீர்ர்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT