அனைத்தையும் பார்க்கக்கூடிய ஒரு புதிய அம்சத்தை chatgptயில் அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI. இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.
AI தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒன்றுதான் Chatgpt. இப்போது அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. நம்முடைய அத்தனை சந்தேகங்களையும் தீர்த்து வரும் தொழில்நுட்பமாக இருந்து வருகிறது. இதில் அவ்வப்போது புது புது அம்சங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இப்போது ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது chatgpt யால் நமது மொபைல் கேமரா மூலம் அனைத்தையும் பார்க்க முடியுமாம். நம் அருகில் இருக்கும் அனைத்தையும் பார்த்து அந்தப் பொருட்களின் அனைத்து விவரங்களையும் நமக்கு கொடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் பார்க்கும் பொருட்களின் விவரங்களை தரும் வகையில் டேட்டாக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது பீட்டா வெர்சனலில் சில பொருட்களை பார்க்க வைத்து அது சொல்லும் பதில்கள் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இதில் ஒரு பிரச்னையும் உள்ளது. அதாவது கேமரா மூலம் அனைத்துப் பொருட்களையும் பார்த்து சொல்லும் என்றால், நமது தனிப்பட்ட விஷயங்களையும் அந்தரங்க விஷயங்களையும் கண்காணிக்க கூடிய அபாயம் இருக்கும். இதனால் இது ஆபத்தான ஒன்று என்று பலரும் கூறுகின்றனர்.
இது ஏஐயின் புதிய வளர்ச்சியா அல்லது அபத்தான வளர்ச்சியா என்பதை தீர்மானிக்க முடியவில்லை. இன்னும் சில வருடங்களில் ஏஐ ஆபத்தான ஒன்றாக மாறிவிடும் என்று பலர் கூறி வரும் நிலையில், இது அதற்கான முதற்படியாக இருக்கும் என்றே அஞ்சப்படுகிறது.