செய்திகள்

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜிநாமா! சலில் அங்கோலா அல்லது சிவசுந்தர்க்கு வாய்ப்பு?

கல்கி டெஸ்க்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துக் கூறிய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்வு குழு தலைவர் யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்க, அக்குழுவில் உள்ள வீரர்களுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், சலில் அங்கோலா அல்லது சிவ சுந்தர் ஆகியோருக்கு பொறுப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தேர்வு குழு உறுப்பினர்களாக சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் ஷரத் மற்றும் சிவசுந்தர் தாஸ் ஆகியோர் உள்ளனர்.

சேத்தன் சர்மா மீது அணியின் பல்வேறு விஷயங்களை கசியவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சேத்தன் சர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டதோடு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் எழுந்தது. இதையடுத்து சேத்தன் சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சேத்தன் சர்மா தனது பதவி விலகல் கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது கடித்தை ஜெய்ஷா ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் டி.வி. சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டி தலைவர் சேத்தன் சர்மா சர்ச்சையில் சிக்கினார். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருடன் கலந்து ஆலோசித்த அணியின் உள் விவகாரங்களை தேவையில்லாமல் வெளியிட்ட அவர், நிறைய வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லாவிட்டாலும் கூட கிரிக்கெட் களத்திற்கு சீக்கிரம் திரும்புவதற்காக ஊசி போட்டுக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இரு விதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை. ஆனால் அவருக்கு கோலியையும் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த கருத்துக்களால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT