செய்திகள்

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!

கல்கி டெஸ்க்

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 53வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதையொட்டி, இந்தியாவின் தேசியத் தலைவர்கள் மற்றும் முக்கியமான பிரமுகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்திக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கும் வாழ்த்துச் செய்தியில், ‘அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நமக்கு நீண்ட பயணம் உள்ளது. ஒன்றாக அணிவகுப்போம்’ என்று அவர் அதில் தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ராகுல் காந்திக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை மீட்டெடுப்பதற்கும் நாம் நடத்தும் போராட்டத்துக்குப் பெரும் நம்பிக்கையைத் தரும் பாசிசத்தை எதிர்த்துப் போராடும் அவரது பாதையில் அவருக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT