மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். 'மாமன்னன்' திரைப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள் தனுஷ் உள்ளிட்ட பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் இந்தப் படம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மானுடர் அனைவரும் சமம் என்பது என் வாழ்க்கை முறை. என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் மாமன்னனுக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“புதுக்கோட்டையில் மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் ரகுபதி, திமுக நிர்வாகிகளுடன் கண்டு ரசித்தார். அதனை தொடர்ந்து உதயநிதி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது” என அமைச்சர் ரகுபதி கூறினார்.
இது தொடர்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் பதிவிட்டிருப்பது, மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.