செய்திகள்

பார்வையாளர் குறிப்பேட்டில் காப்பியடித்து எழுதிய அசாம் முதல்வர்!

கல்கி டெஸ்க்

ந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் பதவியில் இருந்தவர்களைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பார்வையிட்டார். அப்போது அவர் பார்வையாளர் குறிப்பேட்டில் தனது கருத்தைப் பதிவு செய்து எழுதினார்.

முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மாவுக்கு ஆங்கிலமோ, இந்தியோ சரளமாகத் தெரியாததால் அவர் தனது கருத்தாக, வேறு ஒருவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே பார்த்து காப்பி அடித்து எழுதிய காட்சிகளை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். ’மூன்று பட்டங்கள் பெற்று இருக்கும் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா ஆங்கிலம் எழுத தெரியாமல் தடுமாறுகிறார்’ என்று பலரும் அவரைக் கிண்டல் அடித்து வருகின்றனர்.

இதற்கு ட்விட்டர் பதிவின் மூலம் பதில் அளித்துள்ள முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, ‘தான் ஆரம்ப சுகாதார பள்ளியிலேயே தமது அசாமி தாய்மொழியில் படித்ததாகவும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தனக்குப் பெரிதாக புலமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ’தமக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரியாது’ என்று ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதைப்போலவே, அவர் பார்வையாளர் குறிப்பேட்டில் வேறு ஒருவர் எழுதிக் கொடுத்ததை பார்த்து காப்பி அடித்த காட்சிகளைப் பதிவிட்டு பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT