செய்திகள்

சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மகளிர் கால்பந்து வீராங்கனைகள் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து!

கல்கி டெஸ்க்

ருபத்தேழாவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் கடந்த ஜூன் மாதம் 12 முதல் 28ம் தேதி வரை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் விளையாடிய தமிழ்நாடு அணி அனைத்துப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதையடுத்து, கடந்த 26ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ரயில்வே அணியை எதிர்கொண்டு ஆடிய தமிழ்நாடு அணி 3 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்து அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் 28ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹரியானா அணியை எதிர்கொண்டு விளையாடிய தமிழக அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கக் கோப்பையை வென்ற சாதனைப் படைத்தது. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் டி.தேவி, என்.சௌமியா, பி.தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம்.பரமேஸ்வரி, எஸ்.பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ.கார்த்திகா, கே.இந்துமதி, ஆர்.வினோதினி, எஸ்.ஐஸ்வர்யா, ஆர்.சந்தியா, பி.சந்தியா, எஸ்.சண்முகப்பிரியா, ஆர்.யுவராணி, என்.அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் எஸ்.கோகிலா மற்றும் வி.கலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் முதலிடம் பெற்று தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து, தங்கக் கோப்பையை அவரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT