வானவில் மன்றம் திட்டம் 
செய்திகள்

திருச்சி பள்ளியில் ‘வானவில் மன்றம்’ திட்டம்; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கம்!

கல்கி டெஸ்க்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து முதல்வர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் செல்கிறார். அங்கு காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதலமைச்சர் கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.

அதையடுத்து மதியம் பெரம்பலூரில் வேப்பந்தட்டை தாலுகா எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் மாலை 5.15 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு சென்று அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

 நாளை காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் நாளை மதியம் விமானம் மூலம் முதல்வர் சென்னை திரும்புகிறார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. முதல்வரின் வருகையையொட்டி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT