செய்திகள்

தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; ரத்த வெள்ளத்தில் சரிந்த உடல்கள்!

கல்கி டெஸ்க்

டக்கு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரம் ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரமாகக் கதருதப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நகரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று இரவு சுமார் 9.15 மணி அளவில் காதை பிளக்கும் அளவுக்கு வெடிச் சத்தம் கேட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த தேவாலயத்தில் இருந்து மக்கள் சிலர் பதற்றத்தோடு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

வெளியே வந்த அவர்கள் தேவாலயத்தினுள் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாகக் கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்வதற்குள் அனைத்தும் முடிந்து விட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறியபோது, “இந்த தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனையடுத்து நாங்கள் விரைந்து வந்து இங்கு பார்த்தபோது தேவாலயத்தின் உள்ளே யாரும் இல்லை. ஆனால், ஆறு அல்லது ஏழு பேரின் உடல்கள் மட்டும் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தது. இன்னும் சிலர் பலத்த காயங்களோடு துடித்துக் கொண்டிருந்தனர். காயமடைந்தவர்களை நாங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் கொலையாளி யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை கண்டுபிடித்தால்தான் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்னவென்று தெரியும். ஒருவேளை இறந்த கிடந்த நபர்களில் கொலையாளியும் கூட ஒருவனாக இருக்கலாம். இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுஇருக்கலாம். என்று சந்தேகம் இருக்கிறது. அதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர்கள் யார்? எப்போது அவர்கள் ஹம்பர்க் நகரத்துக்கு வந்தார்கள்? அவர்களுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். அதனால் உண்மையான விஷயம் என்னவென்று தெரியாமல் பொதுமக்கள் பயப்படவும் வேண்டாம். வதந்திகளைக் கிளப்பவும் வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளனர்.

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT