கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சமேசா முபின் என்பவர் உயிரிழந்தார் .
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் "உபா சட்டம்" போடப்பட்டுள்ளது. நேற்று ஐந்து பேரையும் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று வின்சென்ட் சாலையில் நின்று கேட்பாற்றற்று, உரிய ஆவணங்களின்றி நின்று கொண்டிருந்த கார்களை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபீன், அமேசான், பிளிப்கார்டில் வேதிப்பொருட்கள் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அப்சர் கான் உயிரிழந்த ஜமேசா முபீனுக்கு ஆன்லைனில் பொட்டாசியம் சார்கோல் சல்பர் உள்ளிட்ட வேதிப்பொருட்களை பறிமுதல் செய்து கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து அப்சர் கானை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த ஐந்து நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.