Court custody of Arvind Kejriwal till 15th of this month
Court custody of Arvind Kejriwal till 15th of this month https://arasiyaltoday.com
செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இம்மாதம் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

கல்கி டெஸ்க்

லைநகர் டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் அரசு மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை  கடந்த மாதம் 28ம் தேதி வரை அமலாக்கத்துறையால் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது நீதிமன்ற காவலை இன்று ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை சார்பில் காவல் நீட்டிப்பு கோரப்படவில்லை. ஆனால், ‘கெஜ்ரிவால் தங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். ஆகையால், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும்’ என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை இம்மாதம் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார். ஆயினும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்  என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே உத்தரவுகளை பிறப்பித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “பிரதமர் மோடியின் செயல்பாடுகள் நாட்டுக்கு நல்லதல்ல” என்று கூறி இருக்கிறார். சிறைக்குச் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால் தம்மோடு, ராமாயணம், மகாபாரதம் மற்றும் நீரஜ் சவுத்ரியின், ‘ஹவ் பிஎம் டிசைட்ஸ்’ (How PM Decides) ஆகிய நூல்களை எடுத்துச் செல்ல நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திரா ஜெயின் ஆகியோரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும் திகார் சிறையில் உள்ளனர்.

விமர்சனங்களுக்கு இளையராஜா கொடுத்த நச் பதில்... வைரலாகும் வீடியோ!

நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம் (Nehru Institute of Mountaineering) வழங்கும் மலையேற்றப் பயிற்சிகள்!

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

SCROLL FOR NEXT