Cyclone 
செய்திகள்

குஜராத்தில் கரையை கடக்கவுள்ள பிபோர்ஜோய் புயல்: தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கல்கி டெஸ்க்

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குஜராத் அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பல பகுதிகளில் நேற்றிலிருந்து பெரும் காற்றுடன் மழை பெய்தும் வருகிறது. குஜராத்தில் 6-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மணிக்கு, 130 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குஜராத் மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதியில் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனமழை

தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிட மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக குஜராத் நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகில் உள்ள ஜக்காவ் துறைமுகம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT