செய்திகள்

பாகிஸ்தானில் மதராஸா மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு விபத்து ! பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

கல்கி டெஸ்க்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் மதரஸா மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள தாண்டா அணை ஏரிக்கு மதரஸாவில் பயிலும் 7 முதல் 14 வயதுக் குட்பட்ட சிறுவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, மாணவர்கள் படகில் பயணித்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய படகு திடீரென ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 10 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், 11 சிறுவர்களை மீட்டுள்ளதாக உள்ளூர் காவலர் மிர் ராப் தெரிவித்துள்ளார். மீதமுள்ள நபர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடை பெறுவதாக கூறியுள்ளார்.

இந்த விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 5 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நேரிட்ட பகுதியில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

20 முதல் 25 பேர் மட்டுமே ஏறக்கூடிய படகில் அதிக அளவிலான மாணவர்கள் ஏறியதே விபத்து ஏற்படக் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ராணுவப் பொறியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து, கடந்த 72 மணி நேரமாக இரவு பகலாக மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT