இந்தியாவின் பொருளாதாரத்தை செழிப்பாக்க வேண்டுமானல், ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் ஆகிய கடவுள் படங்களையும் அச்சிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
எனது வீட்டில் தீபாவளி பூஜை செய்து கொண்டிருந்தபோதுதான் எனக்கு இப்படி ஒரு ஐடியா உதித்தது. நமது நாட்டில் பொருளாதாரத்தை வலிமையாக்க மனித முயற்சிகள் மட்டும் பத்தாது. அதற்கு கடவுள் அருளும் தேவை.
தெய்வங்களின் அருள் இருந்தால் மட்டுமே நமது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். அந்த வகையில் மத்திய அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், நமது நாணயத்தின் ஒரு பக்கத்தில் காந்திஜியின் படம் உள்ளது, அதன் மறு பக்கத்தில் லட்சுமி மற்றும் விநாயகர் உருவங்கள் பொறிக்கப் பட வேண்டும்.
இனி புதிதாக கரன்சி நோட்டுகளும் நான்யங்கலூம் அச்சடிக்கும்போது, இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த இரு தெய்வங்கலூம் செல்வச் செழிப்புக்கு அதிபதிகள்.
இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. இருப்புனும் அந்நாட்டு கரன்சியில் விநாயக பெருமானின் படம் உள்ளது. அதையே நாமும் ஏன் செய்யக் கூடாது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.