செய்திகள்

தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: சிசோடியா ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு

ஜெ.ராகவன்

துபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா மனு குறித்து பதில் தாக்கல் செய்ய சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

முன்னதாக, கடந்த மார்ச் 31-ம் தேதி விசாரணை நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவினை நிராகரித்திருந்தது. மேலும், மணிஷ் சிசோடியா முதன்மையான குற்றவாளி என்றும், அவருக்கும் தில்லி அரசாங்கத்திலுள்ள அவரது சகாக்களுக்கும் ரூ.90-100 கோடி முன்பணமாக கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டி, அவருக்கு  மிக முக்கியப் பங்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு தற்போது கைவிடப்படிருக்கும் தில்லி புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ, தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் நடத்திய பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அவரை கைது செய்தது. இது தொடர்பான வழக்கு ஏப்ரல் 20-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் மறுப்பு:

ட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு மே 20-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கின் இணை குற்றவாளிகளான வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, சத்யேந்திர ஜெயின் ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்றும், அவர் பிஎம்எல்ஏவின் கீழ் விதிக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துவிட்டதாக கருத முடியாது என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் சத்யேந்திர ஜெயினுக்கு ஜாமீன் வழங்க மறுத்திருந்தது.

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் இருவரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தனர். கைது நடவடிக்கைகளுக்கு பின்னர் தங்களின் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT