செய்திகள்

40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழகத்தில் 3 கல்லூரிகள்!

எல்.ரேணுகாதேவி

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “நாட்டில் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாதது, சிசிடிவி சேமராக்கள் பொருத்தப்படாதது மற்றும் கல்லூரிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. அப்போது, இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற செயல்களை தேசிய மருத்துவ ஆணையம் தவிர்த்துக்கொள்வது நல்லது என ஆவேசமாக தெரிவித்தார். மேலும், மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் சொல்லும் காரணங்களான சிசிடிவி கேமராக்கள் மருத்துவ கல்லூரிகளில் இல்லை என்பன போன்ற சிறு சிறு குறைகளையும், பழுதடைந்துள்ள சிசிடிவி கேமராக்களையும் விரைவில் சரிசெய்து கொடுத்துவிடுவோம். ஆனால், இதுபோன்ற சிறு காரணங்களுக்கான தமிழ்நாட்டின் பாரம்பரியாக செயல்பட்டுவரும் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து போன்ற நடவடிக்கையில் தேசிய மருத்துவ ஆணையம் செல்படுவது வருத்தத்துக்குரியது. இந்த சிறிய குறைகளுக்காக அங்கீகாரத் ரத்து போன்ற பெரிய வார்த்தைகளை சொல்வது என்பது தமிழ்நாட்டின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது என்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 3 மருத்தவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், டெல்லி சென்றுள்ளனர். இதுதொடர்பாக வரும் 4ம் தேதி தேசிய மருத்துவ ஆணையத்துடன் காணொலி வாயிலாக பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT