செய்திகள்

தர்மயுத்தம், கடந்து வந்த பாதை - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

ஜெ. ராம்கி

பிப்ரவரி 2017. இரவு எட்டரை மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த அன்றைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். எதற்காக தியானம், ஏன் கண்ணை துடைத்துக் கொள்கிறார்? என்னதான் பிரச்னை? ஏகப்பட்ட கேள்விகள். பத்தே நிமிடங்களில் ஊடகங்கள் அங்கே ஒன்று கூடிவிட்டன.

20 நிமிடங்களுக்குப் பிறகு தியானத்திலிருந்து எழுந்து வந்த ஒபிஎஸ், முதல்வர் பதவியிலிருந்து தன்னை ராஜினாமா செய்யுமாறு சிலர் கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக வேறு வழியின்றி ராஜினாமா செய்திருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் முதல்வராக நம்பர் ஒன், கட்சியில் நம்பர் டூவாக இருந்த ஒபிஎஸ்ஸை யார் மிரட்டியிருப்பார்கள்?

ஓ. பன்னீர் செல்வத்திற்கு மோடி அரசு நெருக்கடி தருவதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் டெல்லி பக்கம் திரும்பியது. டெல்லியின் ஆசி பெற்ற சசிகலா தரப்பிற்கும் ஓ.பி.எஸ் தரப்பிற்கும் மோதல் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்பட்டார்.

ஒபிஎஸ்ஸின் ராஜினாமா சசிகலாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடினார்கள். அத்தனை எம்.எல்.ஏக்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்கள். ஓரங்கட்டப்பட்டிருந்த ஓ.பி.எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். தர்மயுத்தம் ஆரம்பமானது!

ஓ.பி.எஸ் தங்கியிருந்த கிரீன்வேஸ் சாலை வீடு, திருமண வீடாக மாறியது. அ.தி.மு.க தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தார்கள். அத்தனை தொண்டர்களுக்கும் காபி, டீ, சாப்பாடு என்று தடபுடலான வரவேற்பு கிடைத்தது. அம்மா வாழ்க, ஓ.பி.எஸ் வாழ்க.... ஓ.பி.எஸ்தான் முதல்வர் என்றெல்லாம் கோஷங்கள் எழுந்தன.

தர்மயுத்ததிற்கு ஓ.பி.ஸ் விளக்கமும் தந்தார். 'அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தியானம் செய்யவே நான் சென்றேன். ஆனால், நான் பட்ட அவமானங்கள் என்னை மீறி பல வார்த்தைகளைச் சொல்லவைத்தன. முதலமைச்சராக பதவியேற்ற இரண்டு மூன்று தினங்கள் கழித்து மற்றவர்களால் உருவாக்கப்பட்ட அவமானத்தை, கட்சியின் நலன் கருதி, ஆட்சியின் நலன் கருதி இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்தேன். கட்சிக்கோ, ஆட்சிக்கோ சின்ன பங்கம்கூட வந்துவிடக் கூடாது என்பதற்காக அதையெல்லாம் தாங்கிக்கொண்டு, ஒவ்வொரு அவமானத்தையும் பொறுமையாக சகித்துக்கொண்டு என் உள்ளேயே ஜீரணித்து முழுங்கிக்கொண்டு இருந்தேன். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட அந்த நிகழ்வுகளால் வேதனையில் துடித்தேன்' என்றார்.

யார் அவமானப்படுத்தினார்கள்? யாரை எதிர்த்து ஓ.பி.எஸ் தர்மயுத்தத்தை ஆரம்பித்தார்? ஐந்தாண்டுகளில் நிறைய பேர் மறந்து போயிருப்பார்கள். சசிகலா குடும்பத்தை எதிர்த்துதான் தர்மயுத்தம் ஆரம்பமானது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT