செய்திகள்

திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 மதிப்பெண் பெற்று சாதனை !

கல்கி டெஸ்க்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600/600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் .

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த பாட பிரிவிலும் சதமடித்து சாதனை பெற்றுள்ளார் மாணவி நந்தினி. மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் மாநிலத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்விம் தமிழ்நாடு அரசு பள்ளிகள் மற்றும் மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர்.

மாணவர்கள்: 3,82,731 ;

மாணவியர்: 4,21,013

தேர்ச்சி பெற்றவர்கள் 7,55,451 (94.03%)

தேர்ச்சி பெற்ற மாணவியர்- 4,05,753 (96.38%)

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3,49,697 (91.45%)

மூன்றாம் பாலினத்தவர் 1 (100%)

மாணவர்களை விட மாணவியர் 4.93% தேர்ச்சி அதிகம்

மாநிலத்தின் மொத்த மேல்நிலைப்பள்ளிகள் 7533

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகள் 2767.

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகள் 326

அரசு பள்ளிகள் 89.80%

அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%

தனியார் சுயநிதி பள்ளிகள் 99.08%

இருபாலர் பள்ளிகள் 94.39%

பெண்கள் பள்ளிகள் 96.04%

ஆண்கள் பள்ளிகள் 87.79%

பாட வாரியாக 100% மதிப்பெண் பெற்று சதமடித்த மாணவ மாணவிகள் விவரங்கள் :

தமிழ்- 2

ஆங்கிலம்- 15

இயற்பியல் 812

வேதியியல் 3909

உயிரியல் 1494

கணிதம் 690

தாவரவியல் 340

விலங்கியல் 154

கணிணி அறிவியல் 4618

வணிகவியல் 5678

கணக்கு பதிவியல் 6573

பொருளியல் 1760

கணிணி பயன்பாடுகள் 4051

வணிக கணிதம், புள்ளியியல் 1334

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT