செய்திகள்

இன்போசிஸ் நிர்வாகத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் அதிகாரியை தெரியுமா?

கல்கி டெஸ்க்

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் சமீபத்தில் தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இன்போசிஸ்-ன் நிதி நிலையை தாண்டி முக்கிய உயர் அதிகாரிகளின் சம்பளம் விபரம் வெளியானது.

இன்போசிஸ் தனது வருடாந்திர அறிக்கையில் AI என்ற சொல்லை 56 முறையும், Aritifical Intelligence என்ற சொல்ல-ஐ 4 முறையும் பயன்படுத்தியுள்ளது மூலம் இன்போசிஸ் தனது வர்த்தக பாதையை எந்த பக்கம் கொண்டு செல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2022-23 நிதியாண்டில் அவருடைய வருடாந்திர ஊதியம் 21 சதவீதம் குறைந்து 56.4 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் 2015 பங்கு விருப்பத் திட்டத்தின் கீழ் 1,24,783 பங்குகளையும், 2019 திட்டத்தின் கீழ் 73,962 பங்குகளை பணமாக்கியுள்ளார்.

2022-23 ஆம் நிதியாண்டில் இன்போசிஸ் சேர்மன் ஆக இருக்கும் நந்தன் நிலேகனி ஆகஸ்ட் 2017 முதல் இப்பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது முதல் 2017-23 ஆம் நிதியாண்டு வரையில் கிட்டத்தட்ட 6 வருடம் எவ்விதமான சம்பளமும் வாங்காமல் தனது பணியை இன்போசிஸ் நிர்வாகத்தில் செய்து வருகிறாராம்.

இன்போசிஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் டிஜிட்டல், கிளவுட், ஆட்டோமேஷன் ஆகிய துறைகளில் சிறப்பான வர்த்தகத்தை பெற்று லாபம், வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து. ஆனாலும் 2023 ஆம் ஆண்டில் ஜூன் 6 ஆம் தேதி வர்த்தக முடிவு வரையில் 16.09 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT