செய்திகள்

வந்தே பாரத் ரயிலில் சென்னை டூ கோவை செல்ல கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கல்கி டெஸ்க்

ந்தே பாரத் என்ற அதிநவீன விரைவு சொகுசு ரயில் நாட்டின் முக்கிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், சென்னை - கோவை இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். வழக்கமான ரயில் சேவை நாளை 9ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

இந்த ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் சென்னையிலிருந்து மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயில் சுமார் 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளதால் பயண நேரம் வெகுவாகக் குறையும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற ரயில்களை விட இந்த ரயிலில் பயண நேரம் ஒரு மணி நேரம் 20 நிமிடம் குறைவாகும்.

சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய கட்டண விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து கோவைக்கு ஏசி சேர் காரில் பயணம் செய்ய 1,365 ரூபாயும், எக்சிகியூட்டிவ் சேர் காரில் பயணம் செய்ய 2,485 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலில் சென்னையிலிருந்து சேலம் செல்ல ஏசி சேர் காருக்கு 895 ரூபாயும், எக்சிகியூட்டிவ் சேர் காரில் செல்ல 1,740 ரூபாயும், ஈரோடு செல்ல ஏசி சேர் காருக்கு 985 ரூபாயும், எக்சிகியூட்டிவ் சேர் காரில் செல்ல 1,930 ரூபாயும், திருப்பூருக்கு ஏசி சேர் காருக்கு 1,280 ரூபாயும், எக்சிகியூட்டிவ் சேர் காருக்கு 2,325 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே இந்த ரயிலில் சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல ஏசி சேர் காரில் வெயிட்டிங் லிஸ்ட் 19ம், எக்சிகியூட்டிவ் சேர் காரில் வெயிட்டிங் லிஸ்ட் 3 ஆகவும் உள்ளது. கோவையிலிருந்து சென்னைக்கு வர முதல் நாளான்று ஏசி சேர் காரில் வெயிட்டிங் லிஸ்ட் 17 ஆகவும், எக்சிகியூட்டிவ் சேர்காரில் வெயிட்டிங் லிஸ்ட் 6 ஆகவும் உள்ளது. ரயிலில் உணவும் வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவின்போது உணவு கட்டணமும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது. உணவு வேண்டாம் எனில் அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இந்தக் கட்டண விவரங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்தியன் ரயில்வே தரப்பில் இதுவரை இது சம்பந்தமான எந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT