தொழில்துறையில் சாதிக்க நினைக்கும் தொழில் முனைவோருக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஆனந்த் மஹிந்திரா. மக்களின் நிஜ உலக பிரச்சனை களைத் தீர்க்கவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை பல்வேறு விதங்களில் உருவாக்கி பல வெற்றிகரமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.
இவருடைய வெற்றிக்கு அவரது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்முனைவோர் உணர்வு மட்டும் காரணமல்ல. சமூகப் பொறுப்புணர்வும் முக்கிய காரணம். நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
என்னதான் தலைசிறந்த தொழிலதிபராக இருந்தாலும், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவராகவே இருந்து வருகிறார். உதாரணமாக சமீபத்தில் நடந்த ஓர் வேடிக்கையான சம்பவம் பற்றி பார்க்கலாம். ட்விட்டரில் சமீபத்தில் அவர் பகிர்ந்த காணொளிக்கு ஒரு நபர் போட்ட கருத்துக்கு அவர் அளித்துள்ள பதில், இதற்கு சான்றாக உள்ளது. அவர் தனது நாயுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போல, ட்விட்டரில் காணொளி ஒன்று பதிவேற்றினார். அதற்கு பல்லாயிரக்கணக்கான கருத்துக்கள் வந்தாலும், அபிஷேக் ஜெயஸ்வால் என்ற நபர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
"சார், எனக்கு ஒரு சின்ன கேள்வி. இவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமையை நீங்கள் எப்படி அனுபவிக்கிறீர்கள்"
இந்த கேள்விக்கு திரு ஆனந்த் மகேந்திரா அவர்கள் உடனடியாக பதில் அளித்தார்.
"ஞாயிற்றுக்கிழமை நான் ஒரு தொழிலதிபர் என்பதை மறந்து விடுவேன்" என்று ஜாலியாக ஓர் கருத்து போட்டார்.
இவருடைய இந்த நகைச்சுவையான பதில் இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்துவிட்டது எனலாம். அவர் பதிவிட்ட காணொளிக்கு வருவோம். ஒரு பத்து வினாடி கிளிப்பிங்தான் அது. விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு தன் தோளில் செல்ல நாய்க்குட்டியுடன் அவர் பயணிப்பதை இந்த கிளிப்பில் காணலாம். அதில் ஆனந்தம் மகேந்திரா அவர்கள் அழகிய ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்டு, அவர் முதுகில் நாய்க்குட்டி ஒன்று, கண்ணாடி அணிந்து கொண்டு பயணிப்பது பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையின் உணர்வைத் தெரிவிக்க இதைவிட சிறந்த கிளிப் ஏதேனும் உள்ளதா என்று தனது பதிவில் கேப்ஷனாக எழுதியிருந்தார்.
ஆனந்த் மகேந்திரா தொழில்நுட்பத்துறையில் ஓர் உண்மையான தலைவராகவே உலா வருகிறார். தனது பார்வையில் படைப்பாற்றல் மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். அவர் செய்யும் அனைத்து செயல்களுமே இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலேயே உள்ளன.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.