சாலைகள் விரிவாக்கம்  
செய்திகள்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எந்தெந்த சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது தெரியுமா?

ஜெ. ராம்கி

அண்ணா சாலை-மத்திய கைலாஷ் இடையேயான 3 கிலோ மீட்டர் தூரமுள்ள சர்தார் படேல் சாலை, அடிக்கடி போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் இடம். சென்னை மாநகரப் பேருந்துகள் மட்டுமல்ல பாண்டிச்சேரி வழியாக செல்லும் பேருந்துகளும் இதன் வழியாகவே இயக்கப் படுகின்றன.  

பாந்தியன் சாலை-கூவம் இடையேயான 0.72 மீட்டர் தூரமுள்ள எத்திராஜ் சாலையும் நெரிசலான பகுதிகளாகவே இருந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை-அண்ணாநகர் முதலாவது பிரதான சாலை வரை 1.4 கிலோ மீட்டர் தூரமுள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையும் சென்னையின் நெரிசல் மிகுந்த இடம்.  

இவை அனைத்தும் முதல் கட்டமாக 60 அடி முதல் 100 அடி வரை அகலமாக்கும் பணிகளுக்கான ஆய்வுகள் ஆரம்பமாகியுள்ளன. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடந்துவரும் நேரத்தில் 7 முக்கியமான சாலைகளும் விரிவுபடுத்தப்பட இருக்கின்றன.  

நெல்சன் மாணிக்கம் சாலை - வள்ளுவர் கோட்டம் சாலை வரை 1.1 கிலோ மீட்டர் தூரமுள்ள டேங்க் பண்ட் சாலை, அண்ணா சாலை - பாந்தியன் சாலை வரை 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரீம்ஸ் சாலை, 1.3 கிலோ மீட்டர் தூரமுள்ள நியூ ஆவடி சாலை, 1.5 கிலோ மீட்டர் தூரமுள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 7 சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. 

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளை இணைக்கும் வகையிலும் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.  இது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பாக ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.  

சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடங்கள், கட்டிடங்களை கையகப்படுத்துவது, கையகப்படுத்தப்படும் கட்டிடங்களை இடிப்பது, இழப்பீட்டுத் தொகையை தீர்மானிப்பது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மரங்களை பத்திரமாக அகற்றுவது குறித்து ஆலோசனைக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.  

அடுத்த மாத இறுதிக்குள் அறிக்கை தயாராகிவிடும். அடுத்து வரப்போகும் நிதியாண்டில் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கப் பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.  

அதெல்லாம் சரி. சம்பந்தப்பட்ட 7 சாலைகளில் இருபுறமும் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றும் திட்டமுண்டா, இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள், பாதசாரிகள். கேள்விக்கு என்ன பதில்? 

நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் - அனுசரித்தால் போதுமா? வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

பொய்ப்பொருளும் மெய்ப்பொருளே! -எவ்வாறு?

மற்றவர் உணர்வுகளை புரிந்துகொண்டால் எல்லா உறவுகளும் உன்னதமே!

மனித மனதின் மகத்தான சக்தி!

அன்பும் பாசமும் ஆனந்தமே!

SCROLL FOR NEXT