செய்திகள்

PS 2 வில் குட்டி ஆதித்த கரிகாலன் குட்டி நந்தினி யார் தெரியுமா?

கல்கி டெஸ்க்

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்ட ‘பொன்னியின் செல்வன் 2’ உலகம் முழுவதும் வெள்ளித்திரையில் வெளியானது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் சின்ன வயது ஆதித்த கரிகாலனாக , இளம் நந்தினியாக , குட்டி வயது குந்தவையாக பட்டையை கிளப்பியிருப்பது யார் தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன வயது ஆதித்த கரிகாலனாக 'நிஜமாவே சந்தோஷ்' நடித்துள்ளார். இளம் நந்தினியாக தெய்வத்திருமகள் சாரா அர்ஜுன் நடித்துள்ளார். குட்டி வயது குந்தவையாக சின்னத்திரை நடிகை கன்யா பாரதியின் மகள் நிலா நடித்திருந்தார்

டிக் டாக் பிரபலமான "நிஜமாவே சந்தோஷ்" மாடலிங்கில் ஆர்வம் செலுத்தி வந்தார், அப்போது பொன்னியின் செல்வன் படத்தின் ஆடிஷனுக்கு சென்றுள்ளார். கட்டுக்கோப்பான உடலமைப்பையும், நீண்ட முடியையும் வளர்த்து வைத்திருந்த சந்தோஷை பார்த்த இயக்குநர் மணிரத்னம் ஆரம்பத்திலேயே அவரை அந்த இளம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து விட்டாராம். இளம் வயது ஆதித்த கரிகாலனாக நடித்த "நெஜமாவே சந்தோஷ்" அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது

சிறுவயது நந்தினியாக சாரா அர்ஜுன் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தெய்வத்திருமகள் படத்தில் சியான் விக்ரமின் குழந்தை நிலாவாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் பொன்னியின் செல்வன் படத்தில் பருவ வயது நந்தினியாக நடித்து தனது அழகால் ரசிகர்களை மயக்கி விடுகிறார். இளம் நந்தினியாக சாரா அர்ஜுன் மீது ஏகப்பட்ட இளைஞர்கள் காதல் வசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடித்த இளம் வயது ஆதித்த கரிகாலன் சமீபத்திய பேட்டியில் சாரா அர்ஜுன் பற்றி பேசியுள்ளதும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT