NIFT 
செய்திகள்

பேஷன் டிசைனராக வேண்டுமா? மத்திய அரசின் நிஃப்ட் நிறுவனத்தில் விண்ணப்பம்!

கல்கி டெஸ்க்

மத்திய அரசின் நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. மத்திய அரசின் தேசிய ஃபேஷன் டிசைனிங் கல்வி நிறுவனத்தில் (நிஃப்ட்) ஃபேஷன் வடிவமைப்பு, அணிகலன் வடிவமைப்பு உள்ளிட்ட இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.

இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃ ப் பேஷன் டெக்னாலஜி பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரேலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Students

இந்தக் கல்வி நிறுவனங்களில் Bachelor of Design , Bachelor of Fashion Technology (B.F.Tech) எனும் இரு வகையான இளநிலைப் பட்டப்படிப்புகளும், Master of Design (M.Des), Master of Fashion Management (M.F.M) மற்றும் Master of Fashion Technology (M.F.Tech) ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

இந்தக் கல்வி நிறுவனத்தின் இளநிலைப் பட்டப்படிப்புகளில் பேஷன் டிசைன் - 642, லெதர் ஆஃ ப் பேஷன் டெக்னாலஜி டிசைன் - 168 உட்பட மொத்தம் 2,862 இடங்களும், பேச்சுலர் பட்டப்படிப்பில் அப்பரல் ப்ரோடக்க்ஷன் எனும் பிரிவில் 518 இடங்களும் இருக்கின்றன.

முதுநிலைப் பட்டப்படிப்புகளில் படிப்பில் 171 இடங்கள், மாஸ்டர் ஆஃ ப் பேஷன் மேனேஜ்மென்ட் படிப்பில் 606 இடங்கள், மாஸ்டர் ஆஃ ப் பேஷன் டெக்னாலஜியில் 140 இடங்கள் என்று மொத்தம் 917 இடங்கள் இருக்கின்றன. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளாக மொத்தம் 4,297 இடங்கள் இருக்கின்றன.

இதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் nift.ac.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாதமும், அடுத்ததாக நேரடி தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெற உள்ளன.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT