செய்திகள்

பெங்களூருவில் காரின் மேற்கூரையில் நாய் பயணம் - கடுமையாக விமர்சித்த டுவிட்டர் பயனாளிகள்

ஜெ.ராகவன்

பரபரப்பான, புதுப்புது செய்திகளுக்கு பெயர்போன நகரம் பெங்களூரு. புதிதாகத் தொழில் தொடங்கப்படுவதும் பெங்களூருவில்தான். மென்பொருள் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள இடமும் பெங்களூருதான். அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களும், வாடகை கார் ஓட்டுபவர்களும் புத்திசாலிகள். ஆனால், வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறும் இடமும் பெங்களூர்தான் என்பது பலருக்கும் தெரியாது.

பெங்களூருவில் ஒரு காரின் மேற்கூரையில் நாய் அமர்ந்து செல்லும் காட்சி விடியோவாக வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாலையில் சென்ற மற்றொரு பயணி இந்தக் காட்சியை விடியோவாகப் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். ஆனால், எந்தவிதப் படபடப்போ, பதற்றமோ இல்லாமல் அந்த நாய் அமைதியாகக் காரில் பயணிக்கிறது.

இந்தச் சம்பவம் திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது எதேச்சையாக நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் பலரிடம் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இது தொடர்பாக விவாதமே நடத்தியுள்ளனர்.

காரின் மேற்கூரையில் நாய் எந்தவிதச் சலனமும் இல்லாமல் அமைதியாகப் பயணம் செய்யும் விடியோவில் “இதுதான் பெங்களூரு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 1,49,000 பேர் பார்வையிட்டுள்ளனர். பலரும் இந்த ஆபத்தான பயணத்திற்காக கார் டிரைவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அந்த நாயின் கழுத்தில் பட்டை அணிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாய் ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம். அவர், அந்த நாயை காரின் மேற்கூரையில் அமரவைத்து ஓட்டிச் சென்றிருக்கலாம். ஆனால், சாலையில் இப்படி அழைத்துச் செல்வது பாதுகாப்பானதா? என்று கேட்டு ஒருவர் விமர்சித்துள்ளார். மற்றொருவர் விலங்குகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று கேட்டுள்ளார்.

மற்றொரு நபர், இது நிச்சயமாக தவறானச் செயல். வாய்ப் பேச முடியாத விலங்குகளை இப்படித்தான் ஆபத்தான முறையில் அழைத்துச் செல்வதா‘? நாய்களை எப்படி நடத்துவது என்று டிரைவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விலங்குகளை எப்படிப் பாதுகாப்பாக வளர்ப்பது என்று தெரியாதவர்களுக்கு அதை வைத்திருக்க அனுமதி தரக்கூடாது. இந்தக் காட்சி எனது மனதைப் பாதித்துவிட்டது. நாயை இப்படி நடத்துவதுபோல் தங்கள் பிள்ளைகளை இப்படி நடத்துவார்களா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

விடியோவில் அந்தக் காரின் நெம்பர் தெளிவாகத் தெரிகிறது. பெங்களூரு போலீஸார் அதன் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிந்து அவரை எச்சரிக்க வேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT