யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பு 
செய்திகள்

டவ் ஷாம்பூ இனி கடைகளில் கிடைக்காது!

கல்கி டெஸ்க்

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பான டவ் ஷாம்பூவில், புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து டவ் ஷாம்பூ உட்பட, இந்துஸ்தான் யூனிலீவர் பிராண்டு ஷாம்பூக்கள் அனைத்தும் சந்தையில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

யூனிலீவரின் டவ் உலர் ஷாம்பூ உட்பட பல்வேறு ஷாம்பு பிராண்டுகளான  நெக்ஸஸ், சுவேவ், டிகி மற்றும் ட்ரெசெம்மே ஏரோசோல்ஸ் ஆகியவற்றிலும் புற்றுநோய் உண்டாக்கக் கூடிய பென்சீன் என்ற ரசாயனம் அதிகளவு இருப்பதாக அமெரிக்க FDA (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) உறுதிப் படுத்தியது பெஉம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து டவ் டிரை ஷாம்பூவை அமெரிக்க சந்தையில் இருந்து வாபஸ் பெறப் பட்டுள்ளது.

உலர் ஷாம்பூக்கள் போன்ற ஸ்ப்ரே-ஆன் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பென்சீன் என்பது பெட்ரோலியம் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் கிடைப்பதாகும்.

இதையடுத்து இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் அமெரிக்க சந்தையில் டவ் ஷாம்பூவைத் திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT