தீ விபத்து 
செய்திகள்

துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: பலர் பலி!

கல்கி டெஸ்க்

 உத்தரப் பிரதேச மாநிலம், படோகியில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 60-க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர்.

 -இந்த விபத்து குறித்து மாவட்ட நீதிபதி கவுரங் ரதி கூறியதாவது:

 உத்தர பிரதேசத்தில் படோயி பகுதியில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு நேற்றிரவு துர்கையம்மனுக்கு ஆரத்தி தீபம் காட்டும்போது, அருகிலிருந்த பந்தல் துணியில் தீ பட்டு, பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 60-க்கு மேற்பட்டோர் படு காயமடைந்தனர். 

அவர்கள் உடனடியாக வாரணாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று காலையில் 10 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும்  22 பேர் பனாரஸ் இந்து பல்கலை தீவிர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய தீயணைப்புத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய நான்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கப் பட்டுள்ளதாக வாரணாசி மண்டல ஏடிஜிபி ராம்குமார் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT