earth quake
earth quake 
செய்திகள்

டெல்லியில் நிலநடுக்கமா? ரிக்டர் அளவில் 3.8 என்ற அளவில் பதிவானது!

சுகுமாரன் கந்தசாமி

நேற்று இந்தியா முழுவதும், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டியது. இந்நிலையில் நேற்று டெல்லியில், நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.8 என்ற அளவில் பதிவானது.

கொரோனா அதிக அளவில் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், இல்லாமல், களையிழந்து காணப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்புக் குறைந்துள்ளதால், ஆங்கில புத்தாண்டு விழாவை, குதூகலகமாக மக்கள் கொண்டாடினார்கள். டெல்லி மட்டுமன்றி, இந்தியாவில் பல பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டுதானிருக்கிறது. ஏன் என்பதைப் பார்ப்போம்.

டெல்லி, பஞ்சாப் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு உணரப்படுகிறது. சில சமயங்களில் வலிமையான அதிர்வாக உணரப்பட்டிருக்கிறது. கடந்த சில வருடங்களில் நில அதிர்வுகளின் வலிமை சற்றே அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

நில அதிர்வு ஏற்படக்காரணம், பூமியின் அடியிலுள்ள 'டெக்டோனிக்' தகடுகளே ஆகும். பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள 'டெக்டோனிக்' தகடுகள், எதிர் எதிராக நகர்ந்து உராயும் போது , நில நடுக்கம் ஏற்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் நேபாளம், 'டெக்டோனிக்' தகடுகளின் எல்லையில்(fault zones) இருப்பதால், வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகிறது.

பூமிக்கு அடியில் இருக்கும் இந்தியத்தட்டு, நேபாளம் நோக்கி நகர்ந்ததால் இமயமலை உருவானது. இந்த இரண்டுத் தட்டுகளின் மோதலானது இந்தியா, மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகிறது.

இதனால் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 2017 முதல் 2020 வரை, 26 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி 26, 'பூஜ்' பகுதியில், ஏற்பட்ட 8.1 ரிக்டர் அளவுள்ள நில அதிர்வு, டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் உணரப்பட்டது. 1960 ஆகஸ்ட் 27ல் , டெல்லியில் ஏற்பட்ட, 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தலைநகர் டெல்லியை உலுக்கியது. பல பேர் உயிரிழந்தார்கள். நிறைய பொருட்சேதமும் ஏற்பட்டது.

டெல்லியில் 30 ஆண்டுகளாகக் கட்டப்பட்டப் பல அடுக்குமாடி கட்டிடங்கள் பலவற்றில் நில அதிர்வைத் தாங்கக்கூடிய பிஐஎஸ்(BIS) தரநிலைகள் மீறப்பட்டிருக்கின்றன. இவை ரிக்டர் அளவில் 6 என்ற அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டால், சரிந்து விழுந்து விடும் அபாயத்தில் உள்ளவையாகும். 2020 எடுக்கப்பட்ட ஸர்வேயில், டெல்லியில்,90% கட்டிடங்கள் நில அதிர்வு மண்டலம் பரிந்துரைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது சோகம்.

சென்னையைப் பொறுத்தவரை ஜோன் 3(zone,) ல் உள்ளது. எனவே இங்கு நில நடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. தமிழகத்தின் மற்றப் பகுதிகளும் ஜோன் 2, 3ல் உள்ளதால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

என்றாலும் நிலநடுக்கம் வலிமையாக ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ள, டெல்லி போன்ற நகரங்களில், ஜப்பான் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ளது போல், அதிக நில நடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடங்களைக் கட்டினால் பெரும் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் தடுக்கலாம்.

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

விலை மதிப்பற்ற முட்டை ஓடும், பயன்படுத்திய காபி தூளும்!

அற்புத சத்துமிக்க பாலக்கீரை கட்லெட் செய்யலாம் வாங்க!

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT