இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் இது 7.6 ஆக பதிவானது. இந்தோனேஷியாவின் அம்பன் தீவிலிருந்து 427 கிலோமீட்டர் தொலைவில், 95 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்தோனேஷியாவில் படபடவென ஆடிய கட்டடங்களால் மக்கள் பீதியடைந்தனர் இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின, இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக சாலைகளுக்குத் தஞ்சம் புகுந்தனர். முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு குறைந்தது 4 சிறு அதிர்வுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுமார் மூன்று மணிநேரத்திற்கு பிறகும் அங்கு கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு கட்டிடங்களில் லேசான பாதிப்புகளே ஏற்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.17 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திமோர், மலுகு, பப்வா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. சில கட்டடங்கள் நிலநடுக்கத்தால் ஆடின. இதேபோல, ஆஸ்திரேலியாவிலும் டார்வின் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது. மேலும் 5 புள்ளி 5 அலகுகளாக பிந்தைய அதிர்வுகளும் இருந்ததாக இந்தோனேஷிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. கடும் நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர். எனினும், சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இதற்கு முன்பு, ஜாவா தீவுப் பகுதியில் கடந்த நவம்பர் 21-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 602 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே இதற்கு காரணமாகும். நிலநடுக்கம் மட்டுமின்றி அப்பகுதியில் எரிமலை வெடிப்புகளும் கூட அடிக்கடி ஏற்படும்.
கடந்த ஆண்டு ஜனவரியில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் கடந்த 2004ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தான் சுனாமி உருவானதாக கூறப்படுகிறது. அப்போதைய சுனாமியின் போது இந்தியா உள்பட 12 நாடுகளில் பல்வேறு இடங்களில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.