இங்கிலாந்தில் ராணி 2-ம் எலிசபெத் மறைவிற்கு பிறகு அந்நாட்டநரசராகப் பொறுப்பேற்றார் அவரது மகன் சார்லஸ். அவர் பொதுமக்களை சந்தித்த சென்றபோது, தொடர்ந்து 2-ம் முறையாக அவர்மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் மரணத்துக்கு பிறகு மன்னராக பதவியேற்றுள்ள 3-ம் சார்ல்ஸ், நாடு முழுவதும் பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நேற்று அவர் மக்களை சந்தித்துப் பேசினார். மன்னர் 3-ம் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா சார்லஸ் ஆகியோர் பொதுமக்களிடம் உரையாடியபோது, கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் வீசிய முட்டை, சார்லஸ் அருகே வந்து கீழே விழுந்து உடைந்தது. அவர் சுதாரித்து திரும்புவதற்குள் அடுத்தடுத்து முட்டைகள் வீசப்பட்டு உடைந்து சிதறின. மேலும் '' நீங்கள் எங்கள் மன்னர் அல்ல'' என்று கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் சார்லஸை அந்த இடத்திலிருந்து மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராணி எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு மன்னர் சார்லஸ் இரு முறை பொதுமக்களை மக்களை சந்திக்க வந்தபோது, இரண்டு முறையும் முட்டை வீசப்பட்டுள்ளது. அதனால் மன்னரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரச குடும்பத்தின் மீது இங்கிலாந்து மக்களுக்கு அன்பும் மரியாதையும் இருந்தாலும், பொதுமக்கள் ஒரு சிலருக்கு சார்லஸ் மன்னரானது பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.