செய்திகள்

2011 முன்பு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்ல!

எல்.ரேணுகாதேவி

தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தன் அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் என கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவினை காரணம்காட்டி கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறி அவர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வை பள்ளிக்கல்வித் துறை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெறவேண்டும் என அரசு அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தபின்பும் தகுதி தேர்தவில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும், மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு, கடந்த 2011ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என்றும், அவர்களுக்கான ஊதிய உயர்வு வழங்க தகுதித் தேர்வு கட்டாயமில்லை என உத்தரவிட்டனர்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT