செய்திகள்

கொடைக்கானல் சென்ற ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு!

சேலம் சுபா

லைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக் கானலுக்கு இன்று வருகை தந்த  தமிழ்நாடு ஆளுநரை ஆர்.என். ரவியை வரவேற்கும் விதமாக அங்குள்ள பழங்குடியினப் பெண்கள் பறையிசை வாத்தியம் முழங்க பாரம்பரிய நடனமாடி ஆளுநரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

 அப்போது, பழங்குடியின பெண்களிடம் பேசிய ஆளுநர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  “விவசாய நிலங்களுக்கு பட்டா தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். உணவுப் பழக்கம் குறித்துக் கேட்டார். முதலில் நிறைய விவசாய நிலங்களில் நாங்களே பயரிட்ட கம்பு, சாமை போன்ற இயற்கை உணவுகளை சாப்பிட்டோம், இப்போது அது குறைந்து கிழங்கு தேன் கீரை என கிடைப்பதை உண்கிறோம். எங்களுக்கான காடு சார்ந்த நிலங்களை சீரமைத்துத் தந்தால் உணவுகளை பயிரிட நன்றாக இருக்கும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் இன வளர்ச்சிக்கும் மற்றும் எங்கள் பிள்ளைகளின் கல்விக்கும் உதவும்  என்றனர்.

      இங்குள்ள குழந்தைகளுக்கு தனிப்பள்ளி வசதி இல்லை என்பதையும் சொன்னோம். ஐந்தாம் வகுப்பு வரை உண்டு, உறைவிடப் பள்ளி இருந்தாலும் அதனால் பயனில்லை என்பதையும் குறிப்பிட்டோம். ஏகலைவா பள்ளி வேண்டும் என்பதையும் மனுவில் குறிப்பிட்டு உள்ளோம் என்றோம். கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.“

      ஆளுநரின் நம்பிக்கையான உறுதிமொழி கொடைக்கானல் வாழ் பழங்குடியினருக்கு மனதில் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT