செய்திகள்

வண்டி டயர் மோசமா இருந்தா கூட இனி அபராதம் கட்டணும்?

கிரி கணபதி

ந்தியாவில் பல்வேறு காரணங்களால் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமுறைகள்தான். மேலும் சாலையின் தரம் மோசமாக இருப்பதும் மற்றொரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம். 

வாகனத்தில் திடீரென்று ஏற்படும் பழுதும் சாலை விபத்துகளுக்கு மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் வண்டிகளின் டயர்கள் மோசமாக இருக்கும் நிலையிலும் வாகனத்தை ஓட்டுவதால், அதிகமான விபத்துக்கள் நடந்து வருகிறது. இருசக்கர வாகனம், கார், லாரி, பஸ் என எம்மாதிரியான வாகனமாக இருந்தாலும், அதிலிருக்கும் முக்கியமான பாகங்களில் டயரும் ஒன்றாக இருக்கிறது. எனவே எங்காவது வெளியே செல்ல வேண்டுமென்றால் முதலில் நாம் சரி பார்க்க வேண்டியது நமது வாகனத்தின் டயர்கள் தான். நம்மில் எத்தனை பேர் இதை சரி பார்க்கிறோம்? 

அதிக தூரம் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகக் கூட, நமது வண்டியின் டயர்களின் கண்டிஷன் எப்படி இருக்கிறது என பரிசோதிப்பதில்லை. இது மிகவும் மோசமான சாலை விபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக் கிறது. எனவே சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கக் தொடங்கியுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர் மற்றும் மும்பை நகரங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த இரண்டு நகரங்களையும் இணைக்கும் வகையில் நாக்பூர்-மும்பை எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இந்த சாலையில் மட்டும் 22 கோர விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 36 பேர் உயிரிழந் துள்ளனர். இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை வாகன டயர் கண்டிஷன் மோசமாக இருந்ததுனாலேயே நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

எனவே மோசமான டயர்களுடன் வரும் வாகனங்களை இந்த சாலையில் தற்போது அனுமதிப்பதில்லை. மோசமான நிலையில் இருக்கும் வாகனங்களை இந்த சாலையில் ஓட்டுவதற்கு நாக்பூர் ஆர்டிஓ அதிகாரிகள் தடை விதித்து வருகிறார்கள். இந்த விதியை மீறி யாராவது தனது வாகனத்தை செலுத்தினால், அவர்களுக்கு 20000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டூவீலர், கார் உட்பட எந்த வாகனமாக இருந்தாலும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள டயர்கள் நல்ல கண்டிஷனில் இருக்க வேண்டும். எனவே அவ்வப்போது உங்கள் வாகனத்தின் பெயரை பரிசோதனை செய்து அது மோசமாக இருப்பின், உடனடியாக மாற்றிவிடுவது நல்லது. 

ஹைவே சாலைகளில் வேக வரம்பு அதிகமாக இருப்பதால், வாகனங்கள் பொதுவாகவே 100 கிலோமீட்டர் வேகத்திற்கும் மேல் செல்லும். அந்த வேகத்தில் பயணிக்கும் போது திடீரென கார் டயரில் பழுது ஏற்படும்போது, வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது.

இரவில் ஒளிரும் அதிசயத் தாவரங்கள்!

Brazilian Treehopper: மண்டை மேல கொண்டை வச்சிருக்கானே எவன்டா இவன்? 

ஏர்ல் கிரேய் டீயிலிருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

எமனை உயிர்ப்பிக்க பூமாதேவி வழிபட்ட தலம் எது தெரியுமா?

Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 

SCROLL FOR NEXT