செய்திகள்

எக்ஸ்பிரஸ் சாலை, எலெக்ட்ரிக் ஹைவே அனைத்தும் 2023 இறுதிக்குள் தயார்; இனி 120 கி.மீ வேகத்தில் பறக்கலாம்!

ஜெ. ராம்கி

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலையின் இறுதிக்கட்ட பணிகள் முடிவுடையும் நிலையில் உள்ளன. ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுவரும் நான்கு வழி எக்ஸ்பிரஸ் சாலையாக அமையப் போகிறது. தமிழகத்தில் 106 கி.மீ வரை தூரம் செல்லக்கூடிய பாதையை தயார் செய்வதற்கு அதிக காலமாகிவிட்டது.

இதில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகமும் மாற்றியமைக்கப்பட இருக்கிறது. எட்டு வழிச் சாலைகள், ஆறு வழிச்சாலைகள், நான்கு வழிச்சாலைகள், 2 வழி சாலைகள் என ஒவ்வொன்றும் குறைந்தபட்ச வேகம், அதிக பட்ச வேகம் அனைத்தும் கூடிய விரைவில் மாற்றியமைக்கப்பட இருக்கிறது.

எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ வரையும் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கி.மீ செல்லலாம் என்றும் ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 2018ல் வெளியான அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தடையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

சாலைக் கட்டமைப்பு அதிகரிக்கப்படுவதால் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகமும் அதிகரிக்கப்பட வேண்டியிருக்கிறது. இனி குறைந்த பட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ என்று நிர்ணயிக்கப்பட இருக்கிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறது, டெல்லி வட்டாரம்.

2023 ஆண்டுக்கான திட்டப்பணிகள் பற்றி பேசிய மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒவ்வொரு நாளும் 60 கி.மீ தூரத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படவேண்டும் என்று திட்டமிட்டு, பணிகளை ஆரம்பித்தோம்.

கொரானா தொற்றுப் பரவலின் காரணமாக திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் தினமும் 40 கி.மீ தூரம் வரை சாலைகள் அமைப்பது என்கிற இலக்கில் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். 2024ல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நடப்பாண்டிற்குள் எக்ஸ்பிரஸ் ஹைவே பணிகளை முடிப்பதை இலக்காக முன் வைத்து செயல்பட்டு வருவதாக நிதின் கட்கரி தெரிவித்தார். குறிப்பாக எலெக்ட்ரிக் ஹைவே திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் தந்து வருகிறது. டெல்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையேயான முதல் எலெக்ட்ரிக் ஹைவே தயாராகிக் கொண்டிருக்கிறது.

278 கி.மீ நீளமுள்ள ஹைவேவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை முழுவதும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள மின்சக்தி மையங்கள் உண்டு. ஆனால், பெட்ரோல், டீசல் நிலையங்கள் எதுவும் கிடையாது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT