செய்திகள்

பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமல்ல… இதுவும்தான்!

கல்கி டெஸ்க்

காதலர் தினம் அன்று  'பசு அணைப்பு தினத்தை' கொண்டாட விலங்குகள் நல வாரியம் மக்களை வலியுறுத்தி இருக்கிறது.

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள ஜோடிகள் தங்களுக்குள் அன்பை பொழியவும், காதலைப் பெறவும், மற்றும் காதலை வெளிப்படுத்தவும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

காதலர் தினத்தையொட்டி காதலர் வாரம் என்று பிப்ரவரி 7 முதல் ரோஸ் டே வுடன் துவக்கப்பட்டு கொண்டாடப் படுகிறது. மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், இந்திய விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக பிப்ரவரி 14 அன்று, ‘பசு அரவணைப்பு தினத்தை’ கடைப்பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பசுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக இது கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  ‘தாய்ப் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாடலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆகவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தைக் கொண்டாடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சட்ட ஆலோசகர் பிக்ரம் சந்திரவன்ஷி இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய கலாச்சாரத்தின் மீது கருணை காட்ட மக்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். பசுக்களின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மெல்ல மெல்ல விலகிச் செல்பவர்களை மீட்டெடுப்பதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT