North Korea Flood 
செய்திகள்

வடகொரியாவில் வெள்ளத்தால் 4 ஆயிரம் பேர் பலி… அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

பாரதி

வடகொரியாவில் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

வடகொரியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 ஆயிரம் பேர் இறந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் வட கொரியாவின் சினுய்ஜு நகரத்திலும், சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள பியாங்யான் மாகாணத்தின் உய்ஜு பகுதியிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

அதிலும் கடந்த ஜூலை மாதம் எதிர்பார்க்காத அளவுக்கு பேய்மழை பெய்தது. கனமழையும் வெள்ளமும் அதிகம் ஏற்பட்டு கதிகலங்க வைத்திருக்கிறது.

இதனையடுத்து கிம் ஜான் உன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ரப்பர் படகில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். கிட்டத்தட்ட 7 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை கண்டும், சாலைகள், குடியிருப்பு இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றைக் கண்டும் வேதனையுற்றார்.

இதற்கிடையே வடகொரியா Chagang மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால், 4 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர்.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்த கோர நிகழ்விற்கு எச்சரிக்கை விடப்பட்டும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காததுதான் காரணம் என்று எண்ணிய வடகொரியா அரசு, 20 முதல் 30 அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும், மரண தண்டனையும் விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஷகாங் மாகாணத்தின் கட்சி செயலாளர் கங்-போங்-ஹூன் (Kang Bong-hoon) சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சிறைபிடிக்கப்பட்டுள்ள கங்-போங்-ஹூன், கிம்முடன் எந்நேரமும் ஒன்றாக செயல்பட்டு வருபவர். கிம் மேற்கொள்ளும் அனைத்து ஆய்வு நடவடிக்கைகளின்போதும், பலமுறை பங்கேற்றவர். வடகொரியாவின் வெடிமருந்து தொழில் துறையின் முன்னாள் துணை இயக்குனராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

அதிபர் கிம்மிற்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல், பல உயிர்களைக் கொன்றதாக அதிபர் நினைக்கிறார். இதனாலேயே அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாகவே அதிபர் கூறியிருந்தார், இயற்கை பேரிடர்கள் வரப்போவதை அறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று. ஆகையால்தான் இப்போது இந்த அதிரடி முடிவுகளை எடுத்துள்ளாராம்.  

இதுதொடர்பாக தென்கொரியாவில் சோசன் டிவி உள்ள பல செய்தி தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வடகொரியா தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த செய்திகளும் வரவில்லை.


முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT