பீலே  
செய்திகள்

கால்பந்து மன்னன் பீலே மரணம்!

ஜெ.ராகவன்

உலகப்புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரும், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூன்று முறை கோப்பை வென்றவருமான பீலே, 82 வயதில் வியாழக்கிழமை (டிச. 29) காலமானார்.

“பீலே அமைதியில் ஆழ்ந்துவிட்டார். அவரது ரசிகர்களாகிய உங்களை நாங்கள் என்றும் மறக்கமாட்டோம். உங்களது அன்புக்கு நன்றி” என்று அவரது மகள் கீலே நாஸிமென்டோ இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பீலே, மூச்சுவிடுதலில் சிரமம் இருந்ததால் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடுமையாக உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

மருத்துவமனையில் இருந்தபோதும் அவரது நினைவு கால்பந்து ஆட்டத்திலேயே இருந்தது. கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பிரேசில் அணியினருக்கு மருத்துவமனையில் இருந்தபடியே அவர் உற்சாகம் அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பீலே என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் எட்ஸன் அரான்டஸ் டோ நாஸிமென்டோ. 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 இல் பிரேசில் நாட்டின், மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில், ட்ரெஸ் கோரகோஸ் என்னுமிடத்தில் பிறந்தார்.

தந்தையைப் போலவே இளம் வயதில் அவருக்கு கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் இருந்தது. ஆனால் வறுமை அவரை தடுத்தது. மனம்தளராத பீலே, ஷு பாலிஷ் போட்டும், தேநீர் கடையில் வேலை செய்தும் சம்பாதித்து கால்பந்து பயிற்சியை மேற்கொண்டார்.

18 வயதில், பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற அவர், 1958 இல் நடந்த உலக கால்பந்து போட்டியில், அரையிறுதியில் ஹாட்ரிக் அடித்து பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்தார். இறுதிப்போட்டியில் ஸ்வீடனை எதிர்த்து விளையாடிய பிரான்ஸ் 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்று முதன் முதலாக உலகக் கோப்பையை வென்றது.

பின்னர் 1962 –லும் இவர் பிரான்ஸுக்காக விளையாடினார். அந்தப் போட்டியிலும் பிரான்ஸ் கோப்பை வென்றது. 1970 இல் நடைபெற்ற போட்டியில் இறுதிச்சுற்றில் இத்தாலி அணியை வென்று பிரான்ஸ் கோப்பையை கைப்பற்றியது. நான்கு உலக கோப்பை கால்பந்துபோட்டிகளில் பீலே பங்கேற்று 12 கோல்கள் அடித்துள்ளார்.

பிரேஸில் நாட்டுக்காக 95 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 77 கோல்கள் அடித்தவரும் பீலேதான். கிளப் அணிகள் உள்ளிட்ட முதல்தர கால்பந்து போட்டிகளில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 1,282. மூன்று முறை திருமணம் செய்துகொண்ட அவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT