செய்திகள்

முன்னாள் அதிபர் டிரம்புக்கு 1 மில்லியன் டாலர் அபராதம். ஏன் தெரியுமா?

ஜெ.ராகவன்

2016 ஆண்டு தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தில்லு முல்லுகளில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது வழக்கறிஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 1 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பி அதிகாரத்தை கைப்பற்ற விரும்பும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப, உண்மையில்லாத ஒரு வழக்கை தொடுத்திருக்கிறார். நீதிமன்ற நடைமுறைகளை தொடர்ந்து அவர் துஷ்பிரயோகம் செய்து வருகிறார் என்றும் மாவட்ட நீதிபதி ஜான் மிடில்புரூக்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பிடம் ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார். ஆனாலும், கிளிண்டன் ரஷியாவுடன் சேர்ந்து தேர்தல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டதாக கூறி டிரம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார். தமக்கு 70 மில்லியன் டாலர் நஷ்டஈடாக தரப்பட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிடில்புரூக்ஸ், இந்த வழக்குக்கு போதுமான ஆதாரங்கள் அளிக்கப்படவில்லை. இந்த வழக்கை தொடுத்ததற்கான காரணங்களும் தெளிவாக்கப்படவில்லை. அற்பகாரணங்களுக்காக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இனி இதுபோன்ற வழக்குகள் வரக்கூடாது.

இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரின் வழக்கு செலவுகள் மற்றும் இதர செலவினங்களுக்காக டிரம்ப் 1 மில்லியன் டாலர் நஷ்டஈடாக வழங்க வேண்டும். மேலும் இந்த தொகையை டிரம்ப் மற்றும் அவரது வழக்குரைஞர் அலினா ஹப்பா இருவரும் சேர்ந்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி புரூக் தீர்ப்பில் கூறினார்.

டிரம்ப், தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க காரணமில்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார். நீதிமன்றம் சென்றால் வழக்கு என்ன ஆகும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் வழக்குரைஞர்களின் தவறான அறிவுரைகளைக் கேட்டு அவர் செயல்பட்டு வருகிறார். நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாம்பு கடித்தவருக்கு முதலுதவி என்ன தெரியுமா?

கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!

கோடை காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க 7 எலக்ட்ரோலைட் பானங்கள்!

கொல்லிமலையை ஆட்சிபுரியும் எட்டுக்கை அம்மனைப் பற்றி தெரியுமா?

வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசிக்குதா? இது எதன் அறிகுறி தெரியுமா? 

SCROLL FOR NEXT