செய்திகள்

ரசிகரை மணக்கும் முன்னாள் விம்பிள்டன் சாம்பியன்!

ஜெ.ராகவன்

பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளின் முன்னாள் சாம்பியன் கார்பைன் முகுருஸா, நியூயார்க்கைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

அந்த ரசிகர் வேறு யாரும் அல்ல. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் போது முகுருஸாவுடன் சுயபடம் (செல்ஃபி) எடுத்துக்கொள்ள விரும்பிய நியூயார்க் நகர ரசிகர். அவரது பெயர் ஆர்தர் போர்ஜஸ்.

கடந்த வாரம் ஒரு ஹோட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது தனக்கும் ஆர்தர் போர்ஜஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அவரையே விரைவில் மணக்க இருப்பதாகவும் முகுருஸா தெரிவித்துள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

போர்ஜஸை எப்படி சந்தித்தேன் என்பதை முகுருஸா நினைவுகூர்ந்தார். சென்டரல் பார்க் அருகே நான் தங்கியிருந்த ஹோட்டல் இருந்தது. எனக்கு எந்த வேலையும் இல்லாததால் வெளியில் சென்று சிறிது நடக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது என்ன நோக்கி வந்த ஒரு இளைஞர், “நான் உங்கள் ரசிகன். யு.எஸ். ஓபனில் வெற்றிபெற வாழ்த்துகள்” என்று கூறி என்னுடன் சுயபடம் எடுத்துக் கொண்டார். ஒரு விநாடி எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வாவ்… அவர் மிக அழகாகவும் கண்ணியமானவராகவும் இருந்தார். அப்போதே எனக்கு அவரை பிடித்துப் போய்விட்டது.

அதன் பின் அவரை நான் பலமுறை சந்தித்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து நேரங்களை செலவிட்டோம். சென்டரல் பார்க் பகுதியில் அவருடன் நடந்து சென்றே உரையாடினேன்.

அவர் டென்னிஸ் வீர்ர் இல்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அதுவே என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் ஆடை வடிவமைப்புத்துறையில் பணியாற்றுகிறார்.

அவர் முதலில் என்ன விரும்புவதாக சொன்னபோது எனக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அழுகையே வந்தது. பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு நானும் உங்களை காதலிக்கிறேன் என்றேன். அந்த சில நிமிடங்கள் ரொம்பவும் இனிமையாக இருந்தது என்றார்.

முகுருஸாவுக்கு டென்னிஸ் தவிர நன்றாக சமைக்கத் தெரியும். புத்தகங்கள் படிப்பதிலும் இசையை ரசித்துக் கேட்பதிலும் ஆர்வம் மிக்கவர்.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT