செய்திகள்

வன்முறை எதிரொலியாக தேசிய விழாவில் பட்டாசுகளுக்கு தடை விதித்த பிரான்ஸ் அரசு!

முரளி பெரியசாமி

பிரான்சில் வரும்1 4ஆம் தேதியன்று நடைபெறும் தேசிய விழாவில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது அந்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்தாக பிரான்சிஸ் நாட்டில் பதினேழு வயது இளைஞர் ஒருவரை போலீஸ் கொன்றதைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசுக்கெதிராக பெரும் கலவரங்கள் மூண்டன. அப்போது போராட்டக்காரர்கள் ஏராளமான பட்டாசுகளை போலீஸ்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். கடந்த ஒரு வாரக்காலமாக நீடித்த போராட்டம் வன்முறையாக மாறியதால் கடும் சேதத்தை அந்நாட்டு அரசு சந்திக்க நேர்ந்தது. இதனை போராட்டகாரர்கள் போலீசாரின் இரும்பு கரம் கொண்டு கடுமையாக ஒடுக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பத்தின் பின்னணியிலேயே தேசிய விழாவில் பட்டாசுகள் பயன்படுத்த அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தலைமையிலான அரசு இந்தத் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பாஸ்ட்டில் சிறை உடைக்கப்பட்ட 1789ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் நாள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த சிறை உடைப்பை அடுத்தே அந்த நாட்டில் பிரெஞ்சுப் புரட்சி எனப்படும் எழுச்சி நடந்து, பிரான்ஸ் நாடு மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி நாடாக மாறியது என்பது தெரிந்ததே. எனவே, பாஸ்ட்டில் சிறை உடைக்கப்பட்ட நாளை அந்த நாட்டில் தேசிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நிலையில், இந்த வாரம் நடைபெறும் தேசிய விழாக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பது குறித்து, பிரெஞ்சு அரசு நேற்று சிறப்பு உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அரசிதழில் வெளியிடப்பட்ட அந்த ஆணையில், ஜூலை 14 தேசிய விழாவை முன்னிட்டு பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படும் ஆபத்தைத் தடுப்பதற்காக, பட்டாசுகள், வெடிக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்வது, வைத்திருப்பது, எடுத்துச்செல்வது ஆகியவை தடை செய்யப்படுகின்றன. இது மறுநாள் 15ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.

பிரெஞ்சு பிரதமர் எலிசபெத் போர்ன் அங்குள்ள நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தேசிய விழாவன்று மீண்டும் கலகக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதென கவலையாக இருக்கிறது என்றும், எப்பாடுபட்டாவது தேசிய விழா அன்று பிரான்சைப் பாதுகாப்பதற்காக பாரிய நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிடும் என்றும் தெரிவித்திருந்தார். அவர் இப்படி கூறியதற்கு அடுத்த நாளே பிரெஞ்சு அரசின் இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரெஞ்சுக் காவல்துறையால் ஒரு வாரத்துக்கு முன்னர் 17 வயது இளைஞரான நாகெல் எம் எனும் ஆஃப்ரோ இனத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நீண்ட காலமாகவே பிரான்சில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் இருந்துவந்த நிலையில், இளைஞர் நாகெலின் படுகொலை பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் கடந்த வாரம் ஆறு நாள்கள் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. போலீசின் நடவடிக்கையையும் மீறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கார்கள், போலீஸ் நிலையங்கள், வங்கிகள், தொழில் வர்த்தக மையங்கள், பள்ளிகள், நகர மையங்கள், முக்கிய கட்டடங்கள் மீது தீயிட்டனர்.

வன்முறையில் ஈடுபட்டதற்காக 1,160 சிறுவர்கள் உட்பட 3,700 போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தப் போராட்டத்தின்போது போலீசுக்கு எதிராக பட்டாசுகள், வெடிக்கக்கூடிய பொருட்கள் கணிசமாகப் பயன்படுத்தப்பட்டன என்று காவல்துறை கண்டறிந்துள்ளது. இதே சமயம், நகராட்சி அமைப்புகள் போன்றவை தேசிய விழாவில் பட்டாசுகள் பயன்படுத்த தடை ஏதும் இல்லை என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT