கெளதம் அதானி  
செய்திகள்

தொடர் சரிவில் அதானி குழும நிறுவனங்கள்! உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 30-வது இடத்தில் கௌதம் அதானி!

கல்கி டெஸ்க்

ஹிண்டன்பெர்க் சர்ச்சையின் எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, தற்போது 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி குழும நிறுவனங்கள் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கைக்கு மத்தியில், தொடர்ந்து கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவுக்கு சரிவினைக் சந்தித்து வருகிறது.

அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கையில் தவறாக தகவல்களை அளித்து பங்குச் சந்தைகளில் ஆதாயத்தைத் தேடுவதாக குற்றம் சாட்டியது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம்.

மேலும் அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிட்டது. அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள், பங்கு சந்தைகளில் கடும் சரிவை சந்தித்தன. கடந்த ஒரு மாதத்திற்குள் அதானி குழுமம் சுமார் ரூ.12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குழப்பமான அறிக்கையானது, அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களை கணிசமாக பாதித்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது கேட்ட 88 கேள்விகளுக்கு சரியான பதிலை கூற முடியாமல் அதானி குழுமம் அவைகளை தவிர்த்தது. ஹிண்டர்ன் பர்க்கின் அறிக்கைக்கு பிறகு அதானி குழுமம் கடும் சரிவினைக் கண்டுள்ளது. அதானி குழுமத்தின் எஃப்பிஓ-வினையே ரத்து செய்தது.

ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3- ம் இடத்தில் அதானி இருந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியால் சுமார் 80 பில்லியன் டாலா் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 30 வது இடத்திற்கு கௌதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT