ஜி.எஸ்.டி 
செய்திகள்

ஜி.எஸ்.டி மத்திய அரசு வசூல் 63,380 கோடி!! வேகம்,போகும் மேஜிக் ஜர்னி!

ஜெ. ராம்கி

டிசம்பர் மாத ஜி.எஸ்.டி வசூல் பற்றிய விபரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முந்தைய ஆண்டு, அதாவது 2021 டிசம்பர் மாதம் வசூலான தொகையோடு ஒப்பிடும்போது 15 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. 2022 ஆண்டு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி. வசூல் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தபடியே இருக்கிறது. நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும் டிசம்பர் மாதம் வசூலான தொகை நம்பிக்கையளித்திருக்கிறது.

டிசம்பர் வசூல் என்பது பண்டிகைக்காலத்திற்கான வசூல். இனி நிதியாண்டிற்கான திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, அடுத்த நிதியாண்டுக்கான திட்டமிடல் ஆரம்பமாகும். இப்போதே பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அடுத்து வரும் 3 மாதங்களில் கூடுவதற்குதான் வாய்ப்பு இருக்கிறதோ தவிர, குறைவதற்கு வாய்ப்பில்லை.

டிசம்பரில் வசூலான ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் வரியில், 26 ஆயிரத்து 611 கோடி ரூபாய் மத்திய ஜி.எஸ்.டியாகவும், 33 ஆயிரத்து 357 கோடி ரூபாய் மாநில ஜி.எஸ்.டியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. 78 ஆயிரத்து 434 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டியாக வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது போக, 63 ஆயிரத்து 380 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்ததுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் வசூலான தொகைதான் இதுவரை அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னர் அக்டோபரில் அதிகமான தொகை வசூலானது. தற்போது டிசம்பர் மாதமும் தொகை அதிகரித்திருப்பதால் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கிடைத்த வரவேற்பாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஜி.எஸ் டி வருவாய், தொடர்ந்து அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. அமெரிக்க பொருளாதார சரிவு, உக்ரைன் போர் பயமுறுத்தல்களோடு கொரோனா பரவலும் சேர்ந்து கொண்டது. இவையெல்லாம் அடுத்து வரும் மாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், நம்மால் 6 சதவீத ஜி.டி.பி வளர்ச்சியை தொடர்ந்து எட்டினால் எதையும் சமாளிக்க முடியும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள். வேகம், வேகம்... போகும், போகும்... மேஜிக் ஜர்னி!

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT