மனித ஆந்தை என்றழைக்கப்பட்ட மனிதனுக்கு ஏன் அந்த பெயர் வந்தது? அவரின் தனித்துவம் என்ன என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் பார்ப்போமா?
மார்டின் ஜோ லாரெல்லோ என்பவர் ஜெர்மனியில் 1886ம் ஆண்டு பிறந்தார். இவரே மனித ஆந்தை என்று அழைக்கப்படுபவர். இவர் பல சர்கஸ்களில் வேலைப் பார்த்தவர். இவர் ஏன் மனித ஆந்தை என்று அழைக்கப்பட்டார் எனில், இவர் தனது தலையை 180 டிகிரி அளவுக்கு திருப்பக்கூடியவர். இது பிறப்பினால் வந்த நோயா அல்லது வேறு எதேனுமா என்று கேட்டால் இல்லை என்று சொல்வதே சரி. ஒருவர் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்து சாதித்துக்காட்ட முடியும் என்று சொல்வார்கள்.
இவரும் அப்படித்தான். மூன்று ஆண்டுகள் தொடர் பயிற்சியால் 120 டிகிரி அளவு தனது தலையை திருப்பினார். இதற்கான பயிற்சியும் அதேபோல் பல்வேறு முதுகெலும்பு இடமாற்றம் சிகிச்சையும் செய்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர் அந்தக் காலகட்டத்தில் The boy with the Revolving Head” என்று போற்றப்பட்டார். இதனையடுத்து இந்த திறமையால் அவர் பல்வேறு சர்கஸ் ஷோக்களிலும் பணியாற்றி பிரபலமானார். இவர் தனது நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் அக்ரோபாட்டிக் தந்திரங்களைச் செய்ய பயிற்சி அளித்தார்.
இவர் தனது தலையை திருப்பிய படியே மது அருந்துவாராம், புகைப்பிடிப்பாராம். தன் தலையை பின்னாடி திருப்பி பார்த்துக்கொண்டே முன் நேராக நடக்கும் ஒரே மனிதர் என்று சில அமெரிக்க அருங்காட்சியகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டார். தனது தலையை திருப்பும் திறமையால் பிரபலமான இவர் ஹிட்லரையும் சந்தித்திருக்கிறார்.
மேலும் பெரிய பெரிய நிகழ்ச்சிகள் நடத்தி புகழின் உச்சியில் இருந்தார். அந்தவகையில் இவர் கடைசியாக 1952ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்தார். ஆனால், அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.
இவருக்கு முன்னர் மற்றும் பின்னர் இன்றுவரை யாருமே இதுபோல் தலையை திருப்பியது இல்லை. ஆகையாலேயே மார்டின் ஜோ லாரெல்லோ மனித ஆந்தை என்றழைக்கப்படுகிறார்.